INDIAN FARMS
-------------------------------------------------------------------------------------------------------------------------------------- --------------------------------------------------------------------------------------------------------------------------------------லவ் பேர்ட்ஸ் வளர்ப்பு:
வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளில் லவ் பேர்ட்ஸ்க்கு தனி இடம் உண்டு. கொஞ்சம் இடம் இருந்தாலும் போதும் சின்ன கூண்டு வைத்து இதில் இரண்டு ஜோடி பறவைகள் வரை வளர்க்கலாம்.
கீச் கீச் சத்தம் கேட்டாலே மனதில் மகிழ்ச்சி குடியேறும். இந்த பறவைகளை வளர்ப்பது தனி கலை. அவற்றை குழந்தைகள் போல பராமரித்தால் நம் கைகளில் வந்து விளையாடும்.
பறவைக் கூண்டுகள்
இந்த பறவைக் கூட்டினை வீட்டின் மூலையில் கட்டி தொங்க விட வேண்டும். கூண்டில் இரண்டு சிறிய பானைகளை கட்டி விடுவது அவை முட்டை வைத்து அடை
காக்க வசதியாக இருக்கும். அவை ஊஞ்சல் விளையாட ஒரு கட்டை வைப்பது அவசியம். அப்புறம் தீனி வைக்க ஒரு கிண்ணம், தண்ணீர் பாத்திரம் வைப்பது அவசியம்.
தண்ணீர் பாத்திரம் பாதுகாப்பனதாக இருக்கவேண்டும். இல்லை எனில் பறவைகள் அதில் விழுந்து வெளியேற முடியாமல் தவிக்கும்.
பறவைகளின் உணவு:
லவ் பேர்ட்ஸ் பறவைகள் திணை விரும்பி சாப்பிடும். அப்புறம் சீமைப்பொன்னாங்கன்னி கீரை, பசளிக்கீரை தரலாம். முட்டைக்கோஸ், விதை நீக்கிய ஆப்பிள், புருக்கோலி, போன்றவைகளை உணவாக தரலாம்.
கூண்டுக்குள் ஒரு கணவா ஓடு போட்டு வைத்தால் அதை கொத்தி கொத்தி அலகை கூர் தீட்டிக்கொள்ள வசதியாக இருக்கும்.
எறும்புகள் ஜாக்கிரதை:
கூண்டிற்குள் நியூஸ் பேப்பர் விரித்து வைக்கவேண்டும். அவை கழிவுகளை அகற்ற எளிதாக இருக்கும். தினமும் தண்ணீர் வைக்கவேண்டும். அதில் வைட்டமின் பி மாத்திரை கலந்து வைத்தால் பறவைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும்
பறவைகளின் தீனிக்கு எறும்பு வருவது வாடிக்கை. இது பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முட்டை போடும் பருவத்தில் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். குஞ்சு பொறித்த நேரத்தில் எறும்புகளிடம் இருந்து அவற்றை பாதுகாப்பது அவசியம். எனவே கூண்டைச் சுற்றி எறும்புக் கொல்லி சாக்பீஸ்களை பூசுவது பாதுகாப்பானது.
லவ்பேர்ட்ஸ் அடிக்கடி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். எனவே எளிதில் குடும்பம் பெருகுவதோடு நம் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும்.
மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : indianfarm2000@gmail.com
மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : indianfarm2000@gmail.com
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது இந்தியன் பார்ம் .காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி
நண்பர்களுடன் பகிரவும் :

