INDIAN FARMS
-------------------------------------------------------------------------------------------------------------------------------------- --------------------------------------------------------------------------------------------------------------------------------------பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு
குட்டை அமைத்து மீன்
வளர்ப்பு முறை (meen valarpu in tamil) பற்றிய முழு விபரங்கள் நீங்கள் இந்த
பதிவில் தெரிந்து கொள்ளலாம்..!சாதாரணமாக விவசாயம் என்பது
ஒன்றை சார்ந்த மற்றொன்று. எனவே இயற்கைச்சீற்றம், விலையின்மை, ஆட்கள்
பற்றாக்குறை எனப் பல காரணங்களால் விவசாயத்தில் வருமானம் குறைகிறபோது, அதை
ஈடுகட்டுபவை விவசாயம் சார்ந்த உபதொழில்கள்தான்அதாவது ஆடு வளர்ப்பு,
கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, காடை
வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, மீன் வளர்ப்பு (meen
valarpu in tamil), காளான் வளர்ப்பு என ஏகப்பட்ட பண்ணைத்தொழில்கள் உள்ளன.
வகையில் இன்று நாம் பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு முறை பற்றியும்
அதன் மூலம் கிடைக்கும் லாபத்தையும் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்
வாங்க
இரகங்கள்:
கூட்டு மீன் வளர்ப்பு முறைக்கு (கலப்பு மீன் வளர்ப்பு) பெருங்கெண்டை
மீன்கள் ஏற்ற இரகங்கள். இவை நீரில் உள்ள விலங்கின நுண்ணுயிரிகள்,
தாவரங்கள், கழிவுகள், சிறிய புழுக்கள் போன்றவற்றை உணவாக உண்பதால் இவற்றை
வளர்ப்பது எளிது.அதாவது மீன் வளர்ப்பு பொறுத்தவரை கட்லா, ரோகு,
மிர்கால் ஆகியவை இந்தியப் பெருங்கெண்டை மீன் ரகங்கள். மீன் வளர்ப்பு
முறைக்கு மிக ஏற்றவையாகும்
நிலம்:-
வண்டல் மண் உள்ள பகுதியில் மீன் குளம் அமைத்தால், தண்ணீர் பூமிக்குள்
இறங்காது. மற்ற வகை மணலாக இருந்தால், குழிவெட்டிய பிறகு அரை அடி
உயரத்துக்கு வண்டல் மண்ணைக் கொட்டிப் பரப்ப வேண்டும்.அதிக தண்ணீர் வசதி இல்லாத இடங்களில் குளம் வெட்டிய பிறகு அவற்றில் தார்பாய் விரித்து அதன் மீது களிமண் இடவேண்டும்.இதனால்,
நீர் பூமிக்குள் உறிஞ்சப்படுவதைத் தவிர்க்கலாம். எப்போதும் குளத்தில் 4
அடி உயரத்துக்குத் தண்ணீர் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.
பண்ணை குட்டை அமைப்பது எப்படி?
மீன் குட்டை அமைக்க தேர்வு செய்த நிலத்தில் 5 அல்லது அடி ஆழத்திற்கு செவ்வக வடிவத்தில் குளம் வெட்ட வேண்டும்.குறிப்பாக மண்ணின் தன்மை மற்றும் நீரின் தன்மையை தெரிந்துகொள்ள வேண்டும். எனவே இரண்டிற்கும்
PHமதிப்பு7.5 முதல்8.5 வரை இருக்க வேண்டும்அதேபோல் குளத்தை பெரிய குளமாக வெட்டுவதைவிடச் சிறிய குளங்களாக வெட்டினால், மீன் வளர்ப்பு முறைக்கு எளிதாக இருக்கும்.குளம்
வெட்டிய பிறகு ஒரு சென்ட் அளவுள்ள குளத்திற்கு ஒரு கிலோ கிளிஞ்சல்
சுண்ணாம்பு போட்டு, ஒரு அடிக்கு தண்ணீர் நிரப்ப வேண்டும்.மண்ணில்
கார அமிலத்தன்மை அதிகம் இருந்தால் சுண்ணாம்பு இடவேண்டிய அவசியம் இல்லை.
எனவே மண்ணின் தன்மையை பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டியது
மிகவும் அவசியம் அதன் பிறகு ஒரு ஏக்கர் குளத்திற்கு ஒரு டன் என்ற விகிதத்தில் அப்போது ஈன்ற ஈர சாணத்தை நீரில் கரைத்து விட வேண்டும்.தொடர்ந்து குளத்தில் தண்ணீர் விட்டு மொத்தம் 4
அடி உயரத்துக்குத் தண்ணீர் இருக்குமாறு நிரப்ப வேண்டும். சாணம் கரைத்த ஒரு
வாரத்தில் குளத்தில் நுண்ணுயிரிகள் உருவாகியிருக்கும். தண்ணீருக்குள்
கையைவிட்டுப் பார்க்கும்போது மங்கலாகத் தெரிந்தால் நுண்ணுயிரிகள்
உருவாகிவிட்டன என்று அர்த்தம்.ஒருவேளை நுண்ணுயிரிகள் குறைவாக
இருந்தால், மேலும் சாணத்தைக் கரைத்து விட வேண்டும். நுண்ணுயிரிகள் இருப்பது
உறுதியானவுடன், ஒரு இன்ச்சுக்கு மேல் நீளமுள்ள மீன் குஞ்சுகளைக்
குளத்துக்குள் விட வேண்டும்.ஒரு ஏக்கர் குளத்துக்கு மாதம் 200 கிலோ வீதம் ஈர சாணத்தைத் தொடர்ந்து கரைத்து வர வேண்டும்.
மீன் குஞ்சிகள் கிடைக்கும் இடம்:
இந்த மீன் குஞ்சிகள் அரசு பண்ணைகளில் கிடைக்கும் அங்கு சென்று மீன்
வளர்ப்பு முறைக்கு மீன் குஞ்சிகளை ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் மீன்
குஞ்சிகளை வாங்கி கொள்ளலாம். குளத்தில் மீன் குஞ்சுகள் விடுவதில்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவைக் கடைப்பிடிக்கிறார்கள். மீன்வளத்துறையில் ஒரு
ஏக்கர் அளவு குளத்துக்கு 2,000குஞ்சுகள் விடுமாறு பரிந்துரை செய்கிறார்கள்.
உதாரணத்திற்கு 6 சென்ட் பரப்பளவு கொண்ட குளத்தில்
7,000 குஞ்சுகள் விட்டு வளர்க்கலாம்
மீன்களுக்கான தீவனம்:
பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு முறை பொறுத்தவரை மீன்களுக்கு கடலைப்
பிண்ணாக்கு, தேங்காய்ப் பிண்ணாக்கு, பச்சரிசி தவிடு மூன்றையும் சம அளவில்
கலந்து பிசைந்து மீன்களுக்குத் தீவனமாக இட வேண்டும்.பிறகு மீன்களின்
வளர்ச்சிக்கேற்ப தீவனத்தின் அளவை அதிகரிக்க வேண்டும். மீன்களுக்குத்
தினமும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் தீவனம் வைக்க வேண்டும்.
மீன் அறுவடை:
குஞ்சுகள் வளரும்போது குஞ்சிபருவத்தில் கொஞ்சம் இழப்பு இருக்கும்.
அதுக் அடுத்து பாம்பு, தவளை, பறவைகள் என்று பிடித்து
சாப்பிடுவதிலும் கொஞ்சம் இழப்பு இருக்கும். இழப்புகள் போக 5,000 மீன்கள் வரைதான் வளர்ந்து வரும்.
வருமானம்:
இவ்வாறு வளர்ந்து வந்த மீன்
குஞ்சுகள் குறைஞ்சபட்சமா ஒரு மீன் அரை கிலோ என்று வைத்து கொள்வோம்.
இதன் மூலம் மொத்தம்2,500 கிலோ அளவு மீன் கிடைக்கும். ஒரு கிலோ 150 ரூபாய் என்று விற்பனை செய்தால். அந்த வகையில்,
60 சென்ட் பரப்புல மீன் வளர்க்குறது மூலமா 3,75,000/-
ரூபாய் வருமானம் கிடைக்கும்.
செலவுகள்:
ஒரு இன்ச் நீளம் உள்ள ஒரு மீன் குஞ்சு,1
ரூபாய் விலையில் கிடைக்கின்றது. போக்குவரத்துச் செலவோடு சேர்த்து ஒரு மீன் குஞ்சுக்கு 1.50
ரூபாய் செலவாகும்.அந்த வகையில 7,000 குஞ்சுகளுக்கு 11,250
ரூபாய் செலவாகும். மீன் விற்பனை மூலமாகக் கிடைக்கிற வருமானத்துல கிட்டத்தட்ட 40% பணத்தை மீன்களுக்கான
தீவனத்துக்கே செலவு செய்ய வேண்டியிருக்கும்.
லாபம்:
மீன் பிடிப்பதற்கு, மீன்களை
வலைபோட்டு இழுக்க, எடைபோட, பில் போட்டுக் காசு வாங்க என்று இந்த அனைத்து வேலைக்கும் சேர்த்து குறைஞ்சது 8
வேலை ஆட்கள் தேவைப்படும்.இவர்களுக்கான சம்பளத்தையும் சேர்த்து, கிட்டத்தட்ட 1,75,000/-ரூபாய் வரை செலவாகும்.
மொத்த வருமானம் :3,75,000/- ரூபாய், 1,75,000/- செலவு போக
பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு மூலம் 2,00,000/- ரூபாய் லாபம் கிடைக்கும்.
மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : indianfarm2000@gmail.com
மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : indianfarm2000@gmail.com
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது இந்தியன் பார்ம் .காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி
நண்பர்களுடன் பகிரவும் :

