INDIAN FARMS
-------------------------------------------------------------------------------------------------------------------------------------- --------------------------------------------------------------------------------------------------------------------------------------மாதம் 30,000 வருமானம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு அசத்தும் பாரதி: nattu kozhi valarpu murai
அவர் நாட்டுகோழி வளர்ப்பில் அவர் எவ்வாறு இலாபம் ஈட்ட முடியும் என்பதை நமது வாசகர்களுக்காக பகிர்ந்து உள்ளத்தை இங்கு பதிவு செய்து உள்ளோம்.
நாட்டு கோழி வளர்ப்பு
சண்டை கோழி:
சண்டை கோழி என்று அழைக்கப்படும் ஜாதி கோழி வகைகளை 80 கோழி வளர்த்து வருகிறார்.
இந்த வகை குஞ்சுகளுக்கு மட்டும் உணவாக பொறித்த முட்டை கொடுக்கப்படுகிறது. மாதம் 10 முதல் 15 வரை கோழி விற்பனை செய்கிறார்.
நாட்டு கோழி:
மதுரை சந்தையில் 500 கிராம் அளவு உள்ள நாட்டு கோழி குஞ்சுகளை ரூபாய் 125 க்கு 250 கோழி குஞ்சுகளை வாங்கி வந்து 60 முதல் 65 நாள் வரை மட்டும் வளர்கிறார். 60 நாட்களில் இந்த நாட்டு கோழிகள் 1 கிலோ முதல் 1 கிலோ 250 கிராம் வரை வளர்ந்து விடுகிறது. குஞ்சுகள் வாங்கிய அதே மதுரை சந்தை யில் கிலோ 300 முதல் 330 வரை விற்பனை செய்து விடுகிறார்.
கூடம் அமைப்பு:
40*20 அடியில் தென்னை ஓலை கொண்டு கூடம் அமைத்து உள்ளார். ஒரு ஆள் உள்ளே செல்லும் உயரத்தில் பரண் அமைத்து, கோழி களை அதில் அடைய வைக்கிறார்.
நாட்டு கோழி பராமரிப்பு முறைகள்:
பண்ணை இருக்கும் இடத்தில் மற்ற பறவைகள் வராமல் பார்த்து கொள்ள வேண்டும். மற்ற பறவைகள் மூலம் தான் கோழிகளுக்கு நோய் ஏற்படுகிறது. பண்ணை இருக்கும் அதிக
சத்தம் வராமல் இருப்பது கோழிகளுக்கு நல்லது. கோழி குஞ்சுகளுக்கு முதல் 48 நாட்கள் புரோட்டீன் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே தர வேண்டும். குஞ்சுகளுக்கு பனங்கருப்பட்டியை
தண்ணீரில் கொடுக்க வேண்டும். பிறகு கீரை மற்றும் கரையான்களை கொடுக்கலாம். வெங்காயம், தக்காளி, கேரட் போன்ற காய்கறி கழிவுகளை பொடியாக நறுக்கி கொடுக்கலாம். இதன்
மூலம்
தீவனச்செலவு குறையும்.
மருத்துவம்:
குஞ்சு கொண்டு வந்த முதல் நாள் மட்டும் RDVK ஊசி போட்டு விடுகிறார். பிறகு அதிக நோய்கள் வருவது இல்லை, வேற ஏதேனும் வந்தால் நாட்டு மருந்து கொடுத்து சரி செய்து விடுகிறார்.
உணவு முறை:
நாட்டு கோழி வளர்ப்பில் ஈடுபடும் அனைவரும் இவரின் உணவு முறையை பின் பற்றினாள் அதிக இலாபம் பெறலாம் என்பது உறுதி.
நாம் வளர்ப்பது நாட்டு கோழி, அதர்க்கு எதுக்கு சிறப்பு உணவு என்பதே. இவரின் கேள்வி. கடைகளில் வாங்கும் அரிசியுடன் சிறிது கம்பு மற்றும் சோளம் கலந்து கொடுக்கிறார். அதுவும் மிக மிக சிறிய அளவே. 330 க்கும் மேற்பட்ட கோழிகள் இருக்கும் இவர் பண்ணையின் திவன செலவு 2 மாதங்களுக்கு வெறும் 4000 ரூபாய் மட்டுமே.
நிழல் அமைப்பு :
நாட்டு கோழிகளுக்கு நிழல் மிக மிக அவ்சியம், ஏனெனில் நாட்டு கோழிகள் தங்கள் உடல் சூட்டை தணிக்க நிழல் தேவை, நாட்டு கோழி வளர்க்கும் அதிகமானோர் அதிக பொருள் செலவில் செட் அமைத்து உள்ளனர்.
ஆனால் பாரதி அவர்கள் 30 சென்ட் நிலத்தில் கருவேப்பில்லை மேலும் 30 சென்ட் அகத்தி கீரை பயிர் செய்து உள்ளார். இயற்கையான இந்த நிழல் அமைப்பினால் நோய் வருவது இல்லை..
வருமானம்:
வருமானம்:
பொருள் | ரூபாய் |
சண்டை கோழி 8 * 2000 | 16000 |
நாட்டு கோழி 120*300 | 36000 |
கருவேப்பிலை 150*35 | 5250 |
அகத்தி கீரை | 5000 |
மொத்தம் | 62250 |
செலவு | ரூபாய் |
தீவனம் | 3000 |
மருந்து | 500 |
வேலை ஆட்கள் | 15000 |
மின்சாரம் | 500 |
இதர செலவு | 5000 |
மொத்தம் | 24000 |
நிகர இலாபம் | ரூபாய் |
மொத்த இலாபம் | 62250 |
மொத்த செலவு | 24000 |
நிகர இலாபம் | 38250 |
ஆலோசனை பெற:
இதில் வேலை ஆட்கள் என்பது பாரதி அவர்களின் அம்மாவும், அப்பாவும் மட்டுமே. நாட்டு கோழி வளர்ப்பின் மூலம் மாதம் குறையாமல் ரூபாய் 30000 வருமானம் ஈட்ட முடியும் என்பது இவரின் அசையாத நம்பிக்கை. மேலும் தனது பண்ணை யை விரிவு படுத்தும் முயற்சியில் உள்ளார்.
மேலும் திரு.பாரதி அவர்களின் பண்ணையை பார்வையிடவும், ஆலோசனை பெறவும் இந்த எண்ணில் 8190815622 தொடர்பு கொள்ளவும். கோழி குஞ்சுகள் வாங்கவும், வளர்ப்பு முறைகளை சொல்லி தரவும் திரு.பரதி அவர்கள் எந்த நேரமும் தயாராக உள்ளார்.
நண்பர்களோடு இந்த தகவலை பகிர்ந்து கொள்ளவும்.. ஒருவருக்கேனும் பயன்படும்.
மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : indianfarm2000@gmail.com
மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : indianfarm2000@gmail.com
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது இந்தியன் பார்ம் .காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி
நண்பர்களுடன் பகிரவும் :

