INDIAN FARMS
-------------------------------------------------------------------------------------------------------------------------------------- --------------------------------------------------------------------------------------------------------------------------------------ஜப்பானிய காடை வளர்ப்பு!
ஜப்பானிய
காடை வளர்ப்பு இலாபம் தரும் தொழிலாகும். குறைந்த இடமும், குறைந்த
முதலீடும் காடை வளர்ப்பின் சிறப்புகளாகும். நோய் எதிர்ப்புத் திறன் மிக்க
காடைகளை இறைச்சிக்காக என்றால் 5-6 வாரங்களும், முட்டைக்காக என்றால் 52
வாரங்களும் வளர்க்க வேண்டும்.
காடை இனங்கள்:
நியூசிலாந்து
காடை, சைனாக் காடை, கலிபோர்னியா காடை, ஜப்பானிய காடை, பாப் வெள்ளைக் காடை,
மடகாஸ்கர் காடை, நியூகினியா மலைக்காடை எனப் பல வகைகள் உள்ளன. தமிழ்நாடு
கால்நடை மருத்துவ பல்கலைக் கழகமானது ஜப்பானிய காடைகளை அடிப்படையாக வைத்து,
நந்தனம் 1, நந்தனம் 2, நந்தனம் 3, நாமக்கல் காடை 1, நாமக்கல் தங்கக் காடை
ஆகிய இரகங்களை வெளியிட்டுள்ளது. இவற்றில் நாமக்கல் தங்கக் காடை முட்டைக்காக
உருவாக்கப்பட்ட இனமாகும்.
வளர்ப்பு முறை:
ஜப்பானிய
காடைகளை ஆழ்கூள முறை, கூண்டு முறை, கலப்பு முறை என்று மூன்று முறைகளில்
வளர்க்கலாம். இவற்றில், கூண்டுமுறை வளர்ப்பே சிறந்தது. ஆழ்கூள முறையில் ஒரு
சதுர அடியில் ஐந்து காடைகளை வளர்க்கலாம். முதல் இரண்டு வாரம் வரையில்
ஆழ்கூள முறையில் வளர்த்துப் பின் கூண்டுகளுக்கு மாற்றி வளர்ப்பதே சிறந்த
பராமரிப்பு முறையாகும்.
தீவன மேலாண்மை:
ஜப்பானிய
காடைகளுக்கும் கோழித் தீவனத்தில் பயன்படுத்தப்படும் மூலப் பொருள்களே
பயன்படுகின்றன. காடைக் குஞ்சுகளுக்கான தீவனம் 26-28% புரதமும், 2,800 கிலோ
கலோரி எரிசக்தியும் கொண்டதாக இருக்க வேண்டும். இந்தத் தீவனத்தை 2 வாரம் வரை
கொடுக்கலாம். இறைச்சிக் கோழிக்கான ஆரம்பக்காலத் தீவனம் 75 கிலோவுடன், 5
கிலோ வீதம் புண்ணாக்குத் தூளைக் கலந்து கொடுக்கலாம். இந்தத் தீவனக்
கலவையில் தானியங்கள் பெரிதாக இருந்தால், மீண்டும் ஒருமுறை அரைத்துக்
கொடுக்கலாம்.
100 கிலோ தீவனத்துக்கான மூலப் பொருள்கள்:
வாரம் வரையில் 26-28%, 3-5 வாரம் வரையில் 23-25%, 6 வாரம் அதற்கு மேல் 18%
புரதம் தேவை. இதைப் போல எரிசக்தி 2,800 கிலோ கலோரி, 2,900 கிலோ கலோரி,
2,600 கிலோ கலோரி தேவை. இந்தளவில் காடை உணவைத் தயாரிக்கத் தேவைப்படும் .
இப்படித்
தீவனத்தைக் கலந்து கொடுக்கும் போது, தேவையான புரதம், எரிசக்தி,
தாதுப்புகள் உள்ளனவா என்பதை ஆய்வு மூலம் அறிந்து அளிக்க வேண்டும். ஆறு
வாரம் வரையில் ஒரு காடை 400-500 கிராம் தீவனத்தை உண்ணும். ஆண் காடை 150-190
கிராம், பெண் காடை 180-210 கிராம் எடையை அடைந்த பிறகு விற்பனை செய்ய
வேண்டும். சிறிய தட்டுகளில் சுத்தமான நீரைக் கொடுக்க வேண்டும்
இனப் பெருக்கம்:
ஒரு
ஆணுடன் 2-3 பெண் காடைகளை இனச் சேர்க்கைக்கு விடலாம். ஏழாவது வாரத்தில்
முட்டையிடத் தொடங்கும். பத்தாவது வாரத்தில் முட்டையிடும் தன்மை
தீவிரமாகும். மாலையில் தான் முட்டைகளை இடும். முட்டையின் எடை 10 கிராம்
இருக்கும். முட்டையின் மேல் பழுப்பு, கறுப்பு, நீலப் புள்ளிகள் இருக்கும்.
அடை வைக்கும் முட்டைகளை ஒரு வாரத்துக்கு மேல் சேர்த்து வைக்கக்
கூடாது. அடை வைத்த 18 நாளில் முட்டைகள் பொரிந்து விடும். கோடையில்
முட்டைகளைக் குளிர்ந்த சூழலில் சேமித்து வைக்க வேண்டும்.
குஞ்சுகள் பராமரிப்பு:
காடைக்
குஞ்சுகள் வளர்ப்பிடம் புரூடர் எனப்படும். இது ஒரு அடி உயரத்தில் வட்டமாக
அட்டைகளால் அடைக்கப்பட்ட சிறிய பகுதியாகும். இங்கே, 100 டிகிரி பாரன்ஹீட்
வெப்பத்தை அளிக்க வேண்டும். இதை மின்விளக்கு மூலம் கொடுக்கலாம். தரையில்
செய்தித்தாள் அல்லது காகிதத்தை விரித்து விட்டு அதன் மேல் குஞ்சுகளை
வளர்க்க வேண்டும். இந்தத் தாளை அன்றாடம் மாற்ற வேண்டும். ஒரு குஞ்சுக்கு 75
சதுர செ.மீ. இடம் வேண்டும். தீவனம் மற்றும் குடிநீர்த் தட்டு 1.5-2 செ.மீ.
உயரத்தில் இருக்க வேண்டும்.
ஒளி மேலாண்மை:
ஜப்பானிய காடைகள் இனப்பெருக்க வயதை விரைவில் அடைய ஒரு நாளைக்கு 14-18 மணி நேரம் ஒளி கிடைக்க வேண்டும். இறைச்சிக்காக வளர்க்கும் போது ஒரு நாளைக்குச் சுமார் 8 மணி நேரம் ஒளி கிடைத்தால் காடையின் எடை கூடும்.நல மேலாண்மை:
தாய்க்காடைகளுக்குப்
போதுமான தாதுப்புகள், வைட்டமின்கள் கிடைக்கா விட்டால், கால்கள் வலுவற்ற
மற்றும் நோஞ்சான் குஞ்சுகள் அதிகமாக உற்பத்தியாகும். காடைகளுக்கு,
நுண்ணுயிர் நோய்களான, தொப்புள் ஒவ்வாமை, ஈகோலி நோய், கழிச்சல் மற்றும்
காளான் நோய், நுரையீரல் ஒவ்வாமை, இராணிக்கெட், அம்மை போன்றவை ஏற்படலாம்.
இருப்பினும், கோழிகளை விட, ஜப்பானிய காடைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி
அதிகம்.
காடை இறைச்சியில் மதிப்பூட்டப்பட்ட பொருள்கள்:
ஒரு
காடையிலிருந்து 65-75% இறைச்சி கிடைக்கும். அதாவது, சுமார் 200 கிராம்
காடையைச் சுத்தம் செய்தால் 140 கிராம் இறைச்சி கிடைக்கும். இந்த
இறைச்சியில் அதிகளவில் 20.5% புரதமும், குறைந்தளவில் 5.8% கொழுப்பும்
இருப்பதால், எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவாகக் கருதப்படுகிறது.
சுவையுள்ள
ஜப்பானிய காடை இறைச்சி பலவகை உணவு முறைகளில் பயன்படுகிறது. குறிப்பாக,
தந்தூரி உணவுகளில் இதன் பயன்பாடு அதிகம். காடை முட்டையை வைட்டமின் பாம்
(vitamin bomb) என அழைப்பதில் இருந்து, இதன் சிறப்பை அறியலாம். காடை முட்டை
ஊறுகாய், பஜ்ஜி, கேக் போன்றவற்றைத் தயாரித்து நல்ல வருமானத்தை அடையலாம்.
ஒரு
முட்டையின் விலை ரூ.1.50-2 வரையில் உள்ளது. ஒரு முட்டைக்கான உற்பத்திச்
செலவு ரூ.1.00-1.25 ஆகும். ஆக ஒரு முட்டைக்கு ரூ.0.25-0.50 வீதம் இலாபம்
கிடைக்கும். ஒருநாள் காடைக்குஞ்சின் விலை ரூ.6. இது சாப்பிடும் தீவனம் 500
கிராம். இதற்கான விலை ரூ.15. மற்ற செலவுகள் ரூ.2. ஆக மொத்தச் செலவு ரூ.23.
ஒரு ஜப்பானிய காடை ரூ.30 வரையில் விற்கப்படுகிறது. நிகர இலாபமாக ஒரு காடை
மூலம் ரூ.7 கிடைக்க வாய்ப்புள்ளது.
மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : indianfarm2000@gmail.com
மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : indianfarm2000@gmail.com
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது இந்தியன் பார்ம் .காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி
நண்பர்களுடன் பகிரவும் :

