INDIAN FARMS
-------------------------------------------------------------------------------------------------------------------------------------- --------------------------------------------------------------------------------------------------------------------------------------ஆடு வளர்ப்பு யோஜனா 2022
மத்திய அரசும் மாநில அரசும் விவசாயிகளுக்குப் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றன. கால்நடைகளில் மாடு, ஆடு, மீன் என விவசாயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கால்நடைகளில் ஒன்றான ஆடுகளை வளர்ப்பதற்கு அரசே 4 லட்சம் வழங்குகிறது. அந்த வகையில் தமிழக அரசு, ஆடு வளர்ப்பதற்கு வழங்கக் கூடிய இந்த திட்டத்தைக் குறித்து இப்பதிவு விளக்குகிறது.
ஆடு வளர்ப்புக்கு வழங்கக் கூடிய இந்த திட்டம் மூலம் யாரெல்லாம் பயன் பெறலாம், இந்த திட்டத்திற்கான விதிமுறைகள் என்னென்ன, திட்டத்தின் பயன்கள் என்ன, எவ்வாறு இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் வேண்டும்? போன்ற முழு விவரங்களை இப்பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவாக இக்காலக்கட்டத்தில் ஆட்டின் இறைச்சி அதிகமாகத் தேவைப்பட்டு வருகின்ற, இந்த சூழலில் ஆடுகளின் எண்ணிக்கையை, குறிப்பாகச் செம்மறி மற்றும் வெள்ளாடுகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் பெயர் ஆடு வளர்ப்பு யோஜனா 2022 ஆகும்.
ஆடு வளர்ப்பு யோஜனா 2022
சுயத் தொழில் மற்றும் விவசாயத்தினைக் கருத்தில் கொண்டு ஆடு வளர்ப்புக்கு இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆடு வளர்ப்பு யோஜனா 2022 மூலம் ஆடு வளர்ப்புக்கு வேண்டிய கடன் வசதிகளைச் செய்து கொடுக்கிறது. கிராமப் புறங்களில் இருக்கக் கூடிய கால்நடை வளர்ப்பாளர்களுக்காக மத்திய அரசு இந்த ஆடு வளர்ப்பு யோஜனாவைத் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆடு வளர்ப்புக்கு சுமார் 4 லட்சம் வரை கடன் வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது.
திட்டத்திற்கான தகுதிகள்
இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு என்று பார்க்கும்போது 18 முதல் 50 வயது வரை இருத்தல் வேண்டும்.
ஆண்டு வருமானம் குறைவானதாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் விவசாயியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மத்திய அரசின் இந்த திட்டத்தின் அடிப்படையில் மாநில அரசுகளும் பல திட்டங்களை வழங்கி வருகின்றன. இது போன்ற திட்டங்களின் முக்கிய நோக்கம் என்பது விவசாயம் எனும் நிலையில் நாடு பல்வேறு முன்னேற்றங்களை அடைய வேண்டும் என்பதாக இருக்கின்றது.
இதற்கெனவே பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துகொண்டு இருக்கின்றன. விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் எனக் கூறப்படுகின்றது.
மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : indianfarm2000@gmail.com
மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : indianfarm2000@gmail.com
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது இந்தியன் பார்ம் .காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி
நண்பர்களுடன் பகிரவும் :

